1. இந்த sales repலாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க....???

2. எல்லா டிவி சாணல்லயும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்டுறுக்காங்க ? (பெரிய கொடுமை என்னனா... ஆபிசில எங்க bossஅ பர்த்தா எனக்கு ரோபோ சங்கர் நெனப்பு வந்து சிரிச்சிர்றேன்...)

3. டெலிபோண்ல நம்பர்கள் மேலிருந்து கீழ இருக்கு கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???

4. மூக்கிலிருந்தும் வாயில்லிருந்தும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ?? (அத உடனே எல்லாரும் ஏன் செஞ்சு பார்க்குறாங்க?)

5. flightlaயோ இல்லை நம்ம ரேஞ்சுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா ?? (நாம தான் ஊருக்கு போய்ச்சேரலையே ?? )

6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)

7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???

8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே... பரிசுனாலே அது இலவசம் தாணே.... இல்லயா??

9. Numberஐ ஏன் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???

10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை

11. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே... அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?

12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??

13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்ராங்களே... நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்... இல்லையா ???

14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிரியதாக இருப்பவர்களை விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???



இந்தியாவுல இப்போ எங்க பார்த்தாலும் தீவிரவாதத்தையும், பாகிஸ்தானையும் பற்றி தான் பேச்சு... அது போல் பாகிஸ்தானியர்கள் அவர்களுக்குள் இந்தியாவை பற்றி என்ன பேசிக்கொள்வார்கள் என்று ஒரு கற்பனை....

------------------------

"டேய்... நம்ம அரசாங்கம் அமெரிக்காவுல இருந்து 5000 செப்டிக் டாங்க் (septic tank) வாங்குராங்கலாமே.... தெரியுமா ??"

"அப்படியா.... ங்கொய்யால....அது வந்து எறங்குனதும், இந்தியா மேல படை எடுத்துற வேண்டியது தான்..."


---------------------

"இந்தியாவுல எந்த நம்பிக்கைல ப. சிதம்பரத்தை உள்துறை அமைச்சரா ஆக்கிருக்காங்க ? "

"ஷேர் மார்க்கட்ட அடிச்சி காலி பண்ணுன மாதிரி தீவிரவாதத்தையும் காலி பன்னுவாருங்கர நம்பிக்கைல தான்...."

------------------------

"இந்தியாகாரனுங்க நமக்கு முன்னாடி நிலாவுக்கு ராக்கெட் விட்டுட்டானுங்களே..."

"அதுக்கு தான் நம்ம அரசாங்கம் சூரியனுக்கு ராக்கெட் விடப்போறம்னு சொல்லிருக்காங்களே..."

"சூரியனுக்கு ராக்கெட்டா ? எரிஞ்சிறாது?"

"நம்ம ராத்திரியில விடுவோம்ல!"

--------------------------

பாகிஸ்தான் ISI அலுவலகத்தில்....

"யோவ்... இந்தியகாரணுங்க இம்சை தாங்க முடியலை... ரெண்டு வெள்ளை பேப்பர் கொடு... காட்டமா ஒரு லெட்டர் எழுதுறேன்...."

"சார்.. ஒரு வெள்ளை பேப்பர் தான் இருக்கு"

"அத ஒரு xerox போட்டு ரெண்டா கொடு... இத கூட நான் சொல்லனுமா"

"????????????"

----------------------------



2 நாளைக்கு முன்னாடி ஒரு பதிவ பார்த்தேன் "கூடுதுறை: சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா? அதில் எதுவும் ஆபத்து (ரேடியேசன் ) உண்டா என்று ? "


சரி.... நம்ம பங்குக்கு நாம விசாரிச்சு பார்ப்போம்...பதிவருக்கு நாம உதவி செஞ்சமாதிரியும் இருக்கும்... அட நல்லா இருந்தா நாம ஒன்னு வாங்கிக்கிரலாமேனு நெனச்சு நம்ம பசங்ககிட்ட (அட ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஜூனியர் பசங்கங்க ) "டேய் யாராவது இந்த சைனா மொபைல் போன் வச்சிருக்கானுங்கலானு பார்க்க" சொன்னேன்.

நம்ம பசங்க போயி ஒருத்தன (லோக்கல் ஜார்க்கண்டுகாரன்) இழுத்துட்டு வந்தானுங்க. அவன் ஆளு ஒருமாதிரி கோக்குமாக்கா - அரை மெண்டல் மாதிரி தான் இருந்தான். நான் அப்பவே சுதாரிச்சிருக்கணும், விதி யாரை விட்டுச்சி.

"டேய் நீ சைனா மொபைல் வச்சிருக்கியா ?"

"ஏன் உங்களுக்கு வேணுமா?"

"மொன்ன நாயே!... என்ன பார்த்தா என்ன 2000 ரூபாய் மொபைல second handல வாங்கிறவன் மாதிரியா தெரியுது ?? கேக்குறதுக்கு பதில் சொல்ரா ...."


"சரி சொல்லுங்க"

" நம்ம நண்பர் ஒருத்தர் இந்த மாதிரி ஒரு போன் வாங்கனும்னு பாக்குறார்...ஆனா இதுல நெறைய பிரச்சனை வரும்னு சொல்ராங்களே... இந்த ரேடியேசன், ஹியரிங் ப்ரோப்லேம் இந்த மாதிரி ?? "

"ரேஷன் பத்தி தெரியலை சார்... ஆனா இயரிங் ப்ரோப்லேமலா வராது ... அப்பிடியே வந்தாலும் அதை சரி பண்ணிரலாம் "

"இப்படி ஆல தான் நான் தேடிகிட்டிருந்தேன்.... எப்படி சரி பண்ணலாம் சொல்லு??

"போன காத விட்டு கொஞ்சதூரம் தள்ளி வச்சி பேசலாம்... இல்லினா லேசா என்னை ஊத்தின சரியா போயிரும்"

"என்னடா சொல்ற... என்னை உத்தனுமா?... "( இவன் MBBS படிக்காத டாக்டரா இருப்பான் போல.. பேச்சு கொடு.. பேச்சு கொடு.. என்றது என் மனச்சாட்சி). அதை நம்ம்ம்பி தொடர்ந்தேன்.

"சரி... என்னைய எங்க ஊத்தணும்... காதுலயா இல்லை போன்la யா ??"

"போன்ல ஊத்தின போன் ரிப்பேர் ஆயிரும்... காதுல தான் ஊத்தணும் "

"ஒ... அப்போ காதுல என்னை ஊத்துனா பிரச்சனை இல்லை?"

" ஆமா சார்.. அப்படியே பிரச்சனை வந்தாலும் இயரிங்க கழட்டி வச்சிடா பிரச்சனை இல்லை"

இயரிங்க கழட்டி வைக்கணுமா... என்ன எழவுடா சொல்றான் இவன் என்று அருகில் இருந்த விவரமான பசங்ககிட்ட கேட்டால் அப்போ தான் தெரியுது அந்த நாயி இவ்வளவு நேரம் சொன்னது hearing பத்தி அல்ல ear-ring( அதாவது கம்மல்) பத்தி என்று.

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... இப்போவே கண்ண கட்டுதே...

பேசாம நாமளும் எல்லாரையும் போல "சைனா பொண்ணுங்களுக்கு ஏன் மூக்கு சப்பையா இருக்குனு" கும்மி அடிச்சிட்டு போயிருக்கலாம் . இன்னைக்கு பொழப்பு வெளங்குன மாதிரி தான்...

நல்லா இருங்கடா டேய்.. நல்லா இருங்க.....