ஆஸ்திரேலியா போகுற நம்ம மக்களுக்கு, இந்திய அரசு சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது, அதே போல் இந்தியா வரும் வெளிநாட்டவருக்காக நாங்கள் சில குறிப்புக்களை வெளியிடுகிறோம்.

எப்படி வருவது:

இந்தியாவுக்குள் வருவதற்கு 3 வழிகள் உள்ளன.

முதலாவது: ஏர்-இந்தியா விமானம் முலமாக டெல்லி, மும்பை, சென்னை அல்லது கொல்கத்தாவுக்கு வருவது. முக்கால் வாசி பேரு இப்படி தான் வர்ராய்ங்க. இங்க வந்து இறங்குனதுக்கு அப்புறம் ரயிலோ, பேருந்தோ புடிச்சு அவனுங்க ஊருக்கு போவானுங்க.


எல்லாரும் இறங்கி வேற எங்காவது போவாய்ங்கனா, அப்புறம் விமான நிலையத்த எதுக்கு இந்த ஊர்ல வச்சிருக்கிங்கன்னு உங்களுக்கு தோணும், அப்படி தோணுனா, மூடிக்கிட்டு பேசாம இருக்கணும். எங்க ஊருல நாங்க எங்க வேணா விமான நிலையம் கட்டுவோம்டா அத கேக்க நீ யாருடா என் வென்று.


வந்தோமா, ஊற சுத்தி பார்த்தோமா, காச செலவு செஞ்சமானு இருக்கணும், அத விட்டுட்டு இந்த மாதிரி கேள்விலாம் கேட்டா அடிச்சி பல்ல பேத்துருவோம்.

இரண்டாவது:

இது "ரிஸ்க் எடுக்குறது எனக்கு ரஸ்க் சாப்டுற மாதிரின்னு" சொல்ற மக்களுக்காக. அதாவது பாகிஸ்தானில் இறங்கி அங்கிருந்து காஷ்மீர்ருக்குள் நுழைந்து , அதன் மூலம் இந்தியாவுக்குள் வருவது. இதுல A.K-47 துப்பாக்கி மற்றும் போக்குவரத்து செலவுகள் அனைத்தையும் பாகிஸ்தான் அரசாங்கம் கவனித்துக்கொள்ளும். ஆனால் ஒரே பிரச்சனை உங்கள் உயிருக்கு எங்களால் உத்திரவாதம் கொடுக்க முடியாது.

மூன்றாவது:

பங்களாதேஷ்ல் இறங்கி அங்கிருந்து எல்லையை தாண்டி இந்தியாவுக்குள் வருவது. பங்களாதேஷ் அரசாங்கம் இதை இலவச சேவையாக செய்தாலும் அங்கிருக்கும் சிலர் உங்கள் பணத்தை அபகரிக்கும் ஆபத்து அதிகம்.

ஏர் - இந்திய விமானத்தில் எப்படி நடந்து கொள்வது :


நீங்கள் விமானத்தில் ஏறியவுடன் ஒரு வயதான பெண்மணி "ஏர் - இந்தியா உங்களை வரவேற்கிறது" என்று கூறுவார். உடனே "ஐயோ பூச்சாண்டி!, பூச்சாண்டி!" என்று கூச்சல் போடுதல் கூடாது. அவர் விமான பணிப்பெண். உங்களுக்கு உதவுவதற்க்காக இருந்தாலும், பல நேரங்களில் நீங்கள் தான் அவர்களுக்கு உதவும் படி இருக்கும். (மாத்திரை, மருந்து எடுத்து கொடுக்குறது போன்றவை)



இந்தியாவின் உணவுப்பழக்கங்கள், வாழ்கை முறை மற்றும் பல அடுத்த பதிவில்...


இன்டர்நெட்டில் படித்த ஒரு வெளிநாட்டு கட்டுரையின் பாதிப்பில் எழுதப்பட்டது.



6 கும்மிகள்:

ச்சும்மா டெஸ்டிங்...

:):):)

மொக்கை

Your site takes lot of time to open, Kindly look into this matter

//
Your site takes lot of time to open, Kindly look into this matter
//

Since tamilish is blocked in our network, webpage takes longer to load. try in bsnl or other network and it should be faster

//

மொக்கை

//


இத டைப் பண்றதுக்குள்ள டவுசர் கிளிஞ்சிருச்சி... நீ ஒரே வார்த்தைல மொக்கைனு சொல்லிட்டேயே...

மொக்கைய மொக்கைனு தான சொல்லனும்னு இன்னொரு பின்னூட்டம் போட்டுராதே

Post a Comment