நேற்று நடந்த இரு நிகழ்வுகள் தான் இன்றைய பதிவு....

பதிவ படிச்சமா, ஒரு பின்னோட்டம் போட்டமானு இல்லாம..... இப்ப புதுசா ஒரு வழி கண்டுபிடிச்சிருக்காய்ங்க... அதாவது குறுஞ்செய்தி அனுப்புறது... என்னோட முந்தய பதிவ படிச்ச நண்பன் அனுப்புன குறுஞ்செய்தி "அந்த 15 பொண்ணுங்க பேரு, விலாசத்த சொஞ்சம் அனுப்பவும்".


இவன் எதுக்கு இதக்கேக்குரான்னு யோசிச்சா, அப்பத்தான் தெரியுது நம்மாளு அந்த பொண்ணுங்கள கரெக்ட் பண்ண பாக்குறது. நான் கொஞ்சம் சுதாரிச்சிக்கிட்டு போன் அடிச்சேன்.

"சொல்றா... S.M.S படிச்சியா?"

"ம்ம்.. படிச்சேன்... அவளுங்களுக்கு எல்லாம் கல்யாணம் அயிரிச்சுனு எழுதிருக்கேன் பார்க்கலையா?"

"அதுனால என்ன... எனக்கும் தான் கல்யாணம் ஆயிருச்சி"

"@#%$&"

அட கெரகம் பிடிச்சவய்ங்கலா.... உங்கள மாதிரி ஆளுக இருக்குறதுனால தான் அப்ப...அப்ப மழை பெய்யுது, ஆல் டைம் வெயில் அடிக்குது . உங்களையெல்லாம் அந்த திருநகர் மாமி சாரி சாமி தான் காப்பாத்தனும்

-------------------------------------

நம்ம பய ஒருத்தண் கிட்ட இருந்து மிஸ்ஸுடு கால்....

"என்னடா! கால் பண்ணுனியா?"

"அமாண்டா! ஒரு நம்பர் தர்றேன் எழுதிக்கோ"

"சொல்லு"

"001040203030403"

(நான் மனதுக்குள்)ஆஹா! நண்பன் ஏதோ வெளிநாட்டு நம்பர் கொடுக்குறான் . கண்டிப்பா எதாவது அமெரிக்கா பொண்ணு நம்பரா தான் இருக்கும். இத கரெக்ட் பண்ணி அமெரிக்கா போயி ஹவுஸ் husbanda இருந்துற வேண்டியது தான். லேட்டா வந்தா வசவு, சீக்கிரம் போனா வசவு, பேப்பர தொலைச்சா வசவு.... ச்சே..ச்சே.. எவ்வளவு கஷ்டப்பட்டுட்டோம்... அமெரிக்க போயி சேலைய தொவச்சி போட்டமா, சமையல் பன்னுனோமானு, கைக்கு அடக்கமான புருசன இருந்துறலாம்"

"டேய் வெண்ணை! என்ன தூங்கிட்டியா?"

"இது யாரு நம்பர்டா?"

"என்னோட I.C.I.C.I நம்பரு.... இப்ப உடனே ஒரு ரெண்டாயிரம் ரூபா போட்டு விடு... மறந்துறாத... சரியா... வச்சிர்றேன்..."

என்னடா இப்பிடி கெலம்பிட்டிங்க... கடன் கேக்குரது கூட மிஸ்ஸுடு கால் குடுத்தா கேக்குறது... இது தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதா



13 கும்மிகள்:

தமிழ்மணத்தில் இந்த பதிவை இணைக்கமுடியவில்லை... விவரம் அறிந்தவர்கள் உதவவும்....

//இது தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதா//

suuuuuuuuuuuuuuper

Same blood!!! இதைப் படிங்க!!
http://englisharuna.blogspot.com/2009/06/missed-call-mystery.html
தமிழ்மணத்தில் இணைஞ்சுருச்சு...அதனாலேதானே மறுமொழி திரட்டப் படுது???

//

suuuuuuuuuuuuuuper

//

நன்றி செந்தில்

//
Same blood!!! இதைப் படிங்க!!
http://englisharuna.blogspot.com/2009/06/missed-call-mystery.html
//

வாங்க அருணா,

இப்ப தான் படிச்சிட்டு ஒரு பின்னூட்டமும் போட்டுட்டு வர்றேன்...

ங்கொக்கா மக்கா! செல்லூர் சிங்கமே! உங்களை எதால அர்ச்சனை பண்ரதுன்னே தெரியல (நிஜமாவே மாப்பு),மதுரைகாரனா கொக்கா?!.....எல்லா பதிவுமே சூப்பர் மாப்பு! நம்மல்லாம் அப்பவே அப்படில!

//அமெரிக்காவுல ஹவுஸ் ஹஸ்பண்டா..//

ஹ்ம்ம்... அதுக்கெல்லாம் குடுத்து வச்சுருக்கணுமப்போவ்.

கலக்கல்..

கட்டுரையின் தலைப்பு ரொம்ப நல்ல இருக்கு, செல்லூர் சிங்கம் உண்மையிலே தலைப்பு வைக்கறதுல ...................... Super

//
கட்டுரையின் தலைப்பு ரொம்ப நல்ல இருக்கு, செல்லூர் சிங்கம் உண்மையிலே தலைப்பு வைக்கறதுல ...................... Super
//


நெறைய கடையில சரக்கு சரியில்லாட்டியும் கவர் சூப்பரா இருக்கும்ல.. அது மாதிரி தான் இதுவும்...

இத வச்சி தான ஊற ஏமாத்திக்கிட்டு இருக்கோம்

வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/

Tamil10.com

மிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com

நன்றி
ஈழவன்

புது வலைமனை சொல்லவே இல்ல! அசத்துறீங்க கணேஷ்.

Post a Comment