1. எல்லாரும் மொபைல்ல ஆப் பண்ணுங்கன்னு மீட்டிங்ல சொன்ன அடுத்த நொடி கால் வரும்...

2. தட்கல் டிக்கெட்டுக்காக டென்சனா வரிசையில் நிக்கும் போது நமக்கு முண்ணாடி நிக்கும் நபர் 5 ரூபா சில்லறைக்காக அரை மணி நேரம் கழுத்தறுப்பார் ...

 3.ஜூனியர் பொண்ணுங்க முன்னாடி சீன் போடும்  போது H.O.D வந்து நம்ம +2   மார்க் கேப்பாரு...


4. நம்ம சிக்கிரம் வந்தா பஸ் லேட்டா வரும்... நாம கரெக்டா வந்தா பஸ் முன்னாடியே போயிருக்கும்...


5.  என்னைக்கு  நம்ம கிட்ட  சில்லறை இல்லையோ... அன்னைக்கு கண்டக்டர்கிட்டயும்  சில்லறை  இருக்காது...


6. கிறீச கைல தடவிட்டு எதாவது வேலை பார்க்கும் போதுதான் கண்ட இடத்தில எல்லாம் அரிக்கும் 


7. எந்த பேப்பர நாம தொலைச்சோமோ  அந்த பேப்பர் அபிஸ்ல இருக்குற அவ்வளவு பேருக்கும் தேவைப்படும் 



நேற்று நடந்த இரு நிகழ்வுகள் தான் இன்றைய பதிவு....

பதிவ படிச்சமா, ஒரு பின்னோட்டம் போட்டமானு இல்லாம..... இப்ப புதுசா ஒரு வழி கண்டுபிடிச்சிருக்காய்ங்க... அதாவது குறுஞ்செய்தி அனுப்புறது... என்னோட முந்தய பதிவ படிச்ச நண்பன் அனுப்புன குறுஞ்செய்தி "அந்த 15 பொண்ணுங்க பேரு, விலாசத்த சொஞ்சம் அனுப்பவும்".


இவன் எதுக்கு இதக்கேக்குரான்னு யோசிச்சா, அப்பத்தான் தெரியுது நம்மாளு அந்த பொண்ணுங்கள கரெக்ட் பண்ண பாக்குறது. நான் கொஞ்சம் சுதாரிச்சிக்கிட்டு போன் அடிச்சேன்.

"சொல்றா... S.M.S படிச்சியா?"

"ம்ம்.. படிச்சேன்... அவளுங்களுக்கு எல்லாம் கல்யாணம் அயிரிச்சுனு எழுதிருக்கேன் பார்க்கலையா?"

"அதுனால என்ன... எனக்கும் தான் கல்யாணம் ஆயிருச்சி"

"@#%$&"

அட கெரகம் பிடிச்சவய்ங்கலா.... உங்கள மாதிரி ஆளுக இருக்குறதுனால தான் அப்ப...அப்ப மழை பெய்யுது, ஆல் டைம் வெயில் அடிக்குது . உங்களையெல்லாம் அந்த திருநகர் மாமி சாரி சாமி தான் காப்பாத்தனும்

-------------------------------------

நம்ம பய ஒருத்தண் கிட்ட இருந்து மிஸ்ஸுடு கால்....

"என்னடா! கால் பண்ணுனியா?"

"அமாண்டா! ஒரு நம்பர் தர்றேன் எழுதிக்கோ"

"சொல்லு"

"001040203030403"

(நான் மனதுக்குள்)ஆஹா! நண்பன் ஏதோ வெளிநாட்டு நம்பர் கொடுக்குறான் . கண்டிப்பா எதாவது அமெரிக்கா பொண்ணு நம்பரா தான் இருக்கும். இத கரெக்ட் பண்ணி அமெரிக்கா போயி ஹவுஸ் husbanda இருந்துற வேண்டியது தான். லேட்டா வந்தா வசவு, சீக்கிரம் போனா வசவு, பேப்பர தொலைச்சா வசவு.... ச்சே..ச்சே.. எவ்வளவு கஷ்டப்பட்டுட்டோம்... அமெரிக்க போயி சேலைய தொவச்சி போட்டமா, சமையல் பன்னுனோமானு, கைக்கு அடக்கமான புருசன இருந்துறலாம்"

"டேய் வெண்ணை! என்ன தூங்கிட்டியா?"

"இது யாரு நம்பர்டா?"

"என்னோட I.C.I.C.I நம்பரு.... இப்ப உடனே ஒரு ரெண்டாயிரம் ரூபா போட்டு விடு... மறந்துறாத... சரியா... வச்சிர்றேன்..."

என்னடா இப்பிடி கெலம்பிட்டிங்க... கடன் கேக்குரது கூட மிஸ்ஸுடு கால் குடுத்தா கேக்குறது... இது தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதா



இது முக்கியமா இந்த forwarded மெயில் அனுப்புற மக்களுக்காக. இதுக்குமேல என்னால தாங்க முடியாது... போதும்டா... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்.

கணக்கு வழக்கு பாக்குறதுக்கு கண்டுபுடிச்ச கம்ப்யூட்டர ஜோசியம் பாக்க வச்சது நம்மாளுங்க தான். அதனால இந்த forwarded மெயில் மேட்டரும் நம்மாளுங்க கண்டுபிடிச்சதா தான் இருக்கும்.

நீங்க பண்ணுன அட்டுழியம் கொஞ்சமா நஜ்ஜமா.

மொதல்ல, சினிமா தியேட்டர்ல சீட்டுல எய்ட்ஸ் ஊசி வைக்கிராய்ங்கனு சொன்னிங்க. அதுல இருந்து தியேட்டர் பக்கமே போகலை.

அப்புறம் பெப்சி, கோக-கோலா எல்லாம் கக்கூஸ் கழுவத்தான் லாயக்குன்னு சொன்னிங்க. அதோட சரி. அதையும் விட்டாச்சு.

அப்புறம் vicks action 500ஐ தடை பண்ணிட்டாங்கனு சொன்னிங்க... மருந்து கடைக்காரன் கிட்ட அடி வாங்காதது தான் மிச்சம்.

அதோட இந்த மெயில்ல microsoftக்கு அனுப்புனா லேப்டாப்பு , அந்த மெயில்ல நோக்கியாவுக்கு அனுப்புனா செல்போன்னுணு,என்ன நேக்கா கத சொன்னிங்கடா... லேப்டாப்பும் வரலை, செல்போனும் வரல.

அப்புறம், இந்த விநாயகர், சாய்பாபா படத்தையெல்லாம் அனுப்பி, இத 10 பேருக்கு அனுப்புனா... நீங்க ஆசைப்பட்டதெல்லாம் நடக்கும்னு சொன்னிங்க... ஆனா நான் ஆசப்பட்ட 15ஜும் வேற எவன், எவனையோ கட்டிக்குட்டு இப்ப இந்திய பூர பரவிக்கெடக்குதுங்க.... (ஒன்னும் சிக்கலை )

அதோட விடுராய்ங்கலாணா....அது தான் இல்லை.... நேத்து ஒரு மெயில் வருது... இத உடனே 10 பேருக்கு அனுப்பலைனா... நீ செத்துப்போயிருவேன்னு...... (நமக்கு பயம்லா ஒன்னும் இல்லை.... அட இருந்தாலும் உசுர் விசயத்துல சூதானமா இருக்கனும்ல).

ஆபிசுல வேல வெட்டி இல்லேன்னா... பேசாம எங்கள மாதிரி தமிழ்மணம், தமிளிஷ்ணு பொழுத போக்க வேண்டியதுதான... உங்களுக்கு மட்டும் ஏன் மூளை இப்படி வேல செய்யுது...

போதும்டா... இதுக்குமேல என்னால தாங்க முடியாது... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். இனிமேல் நானும் உங்களுக்கு forward பண்ணல, நீங்களும் எனக்கு forward பண்ணாதிங்க...



"டேய்.. வாடா! என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?"

"ஆபீஸ்ல ஆணி நிறைய...இத புடுங்கு... அத புடுங்குனு ஒரே இம்சை... அப்புறம் வேற என்ன விசேசம்"

"உனக்கு தெரியுமா நம்ம ராஞ்சிகாரன் புதுசா ஒரு வலைப்பூ ஆரம்பிச்சிருக்கான்"

"நல்ல விஷயம் தான... முகவரி சொல்லு"

"http://sellursingam.blogspot.com"

"ஆமா.. அவன் பழைய வலைப்பூ என்னாச்சு"

"அட அது பெரிய கதை... இவன் என்னத்தயாச்சும் வலைப்பூவுல போட்டுட்டு, எல்லாத்துக்கும் போன் அடிச்சு அத பார்த்தியா, இத பார்த்தியானு உயிரை வாங்கிருக்கான்"

"சரி"

"அத பொறுக்க முடியாம நம்ம பயலுவ ஒரு 4-5 பேரு சேர்ந்து அந்த வலைப்பூவுக்கு செய்வினை வச்சிட்டானுங்க"

" யாரு அந்த 4-5 புண்ணியவானுங்க ? "

"அவன் ராஞ்சியில ஒரு சாமியார்கிட்ட மய்யி வச்சி பார்த்ததுல இந்த சிறகுகள் குரூப் பயலுவ மேல தான் சந்தேகமாம்"

"அந்த குரூப்ல தான் இவன் உருத்து பயலுக ரெண்டு மூணு பேரு இருக்காய்ங்களே.. அவிய்ங்க இருந்துமா இப்படி நடந்துச்சு?"

"அட அவனுங்க தான் வசூல் பண்ணி எல்லாம் செஞ்சிறுக்கானுங்க..."

"அடப்பாவமே... அந்த கோவத்துல தான் யாரு போன் அடிச்சாலும் எடுக்கமாட்டேன்குறானா??"

------------------------