இது முக்கியமா இந்த forwarded மெயில் அனுப்புற மக்களுக்காக. இதுக்குமேல என்னால தாங்க முடியாது... போதும்டா... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்.

கணக்கு வழக்கு பாக்குறதுக்கு கண்டுபுடிச்ச கம்ப்யூட்டர ஜோசியம் பாக்க வச்சது நம்மாளுங்க தான். அதனால இந்த forwarded மெயில் மேட்டரும் நம்மாளுங்க கண்டுபிடிச்சதா தான் இருக்கும்.

நீங்க பண்ணுன அட்டுழியம் கொஞ்சமா நஜ்ஜமா.

மொதல்ல, சினிமா தியேட்டர்ல சீட்டுல எய்ட்ஸ் ஊசி வைக்கிராய்ங்கனு சொன்னிங்க. அதுல இருந்து தியேட்டர் பக்கமே போகலை.

அப்புறம் பெப்சி, கோக-கோலா எல்லாம் கக்கூஸ் கழுவத்தான் லாயக்குன்னு சொன்னிங்க. அதோட சரி. அதையும் விட்டாச்சு.

அப்புறம் vicks action 500ஐ தடை பண்ணிட்டாங்கனு சொன்னிங்க... மருந்து கடைக்காரன் கிட்ட அடி வாங்காதது தான் மிச்சம்.

அதோட இந்த மெயில்ல microsoftக்கு அனுப்புனா லேப்டாப்பு , அந்த மெயில்ல நோக்கியாவுக்கு அனுப்புனா செல்போன்னுணு,என்ன நேக்கா கத சொன்னிங்கடா... லேப்டாப்பும் வரலை, செல்போனும் வரல.

அப்புறம், இந்த விநாயகர், சாய்பாபா படத்தையெல்லாம் அனுப்பி, இத 10 பேருக்கு அனுப்புனா... நீங்க ஆசைப்பட்டதெல்லாம் நடக்கும்னு சொன்னிங்க... ஆனா நான் ஆசப்பட்ட 15ஜும் வேற எவன், எவனையோ கட்டிக்குட்டு இப்ப இந்திய பூர பரவிக்கெடக்குதுங்க.... (ஒன்னும் சிக்கலை )

அதோட விடுராய்ங்கலாணா....அது தான் இல்லை.... நேத்து ஒரு மெயில் வருது... இத உடனே 10 பேருக்கு அனுப்பலைனா... நீ செத்துப்போயிருவேன்னு...... (நமக்கு பயம்லா ஒன்னும் இல்லை.... அட இருந்தாலும் உசுர் விசயத்துல சூதானமா இருக்கனும்ல).

ஆபிசுல வேல வெட்டி இல்லேன்னா... பேசாம எங்கள மாதிரி தமிழ்மணம், தமிளிஷ்ணு பொழுத போக்க வேண்டியதுதான... உங்களுக்கு மட்டும் ஏன் மூளை இப்படி வேல செய்யுது...

போதும்டா... இதுக்குமேல என்னால தாங்க முடியாது... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். இனிமேல் நானும் உங்களுக்கு forward பண்ணல, நீங்களும் எனக்கு forward பண்ணாதிங்க...7 கும்மிகள்:

அடப் பாவமே! ரொம்பதான் நொந்து கெடக்குறீங்களோ

அண்ணாச்சி ஒன்னு பண்ணுங்க .. இதையே ஒரு Forward மெயில் மாதிரி போடு உங்க நண்பர்களுக்கு Forward பண்ணி அத மத்தவங்களுக்கு Forward பண்ண சொல்லுங்க.. . எப்படி ஐடியா?

அது!!!

அவன்கள நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்....

போர் அடிக்குதுன்னு திரட்டிங்கள பார்க்கலாம்ன்னு வந்தா "சிறுகதை போட்டி"னு மொக்க கதையெல்லாம் எழுதுறாங்களே அவன்கள நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்....

பார்வேர்டட் மெயிலையும் ஒரு பதிவா போட்டு வெறுப்பேத்துறாங்களே அவன்கள நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்....

இந்த மாதிரி ஃபார்வேர்ட்ல அனுப்ப வேண்டிய மெயிலையெல்லாம் பதிவா போடுறயே....நீ முதல்ல நிறுத்தய்யா நானும் நிறுத்துறேன்...அவ்வ்வ்வ்வ்வ்

நல்ல இருக்கு மக்கா..!

hahahhaa..

இதே மாதிரி இன்னும் பத்து இடுகைப் போட்டா உனக்கு நல்ல காலம் பொறக்கப் போறதா எங்க ஊரு குடுகுடுப்பை கூவுது.

எப்பூடி...?

Post a Comment