2 நாளைக்கு முன்னாடி ஒரு பதிவ பார்த்தேன் "கூடுதுறை: சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா? அதில் எதுவும் ஆபத்து (ரேடியேசன் ) உண்டா என்று ? "


சரி.... நம்ம பங்குக்கு நாம விசாரிச்சு பார்ப்போம்...பதிவருக்கு நாம உதவி செஞ்சமாதிரியும் இருக்கும்... அட நல்லா இருந்தா நாம ஒன்னு வாங்கிக்கிரலாமேனு நெனச்சு நம்ம பசங்ககிட்ட (அட ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஜூனியர் பசங்கங்க ) "டேய் யாராவது இந்த சைனா மொபைல் போன் வச்சிருக்கானுங்கலானு பார்க்க" சொன்னேன்.

நம்ம பசங்க போயி ஒருத்தன (லோக்கல் ஜார்க்கண்டுகாரன்) இழுத்துட்டு வந்தானுங்க. அவன் ஆளு ஒருமாதிரி கோக்குமாக்கா - அரை மெண்டல் மாதிரி தான் இருந்தான். நான் அப்பவே சுதாரிச்சிருக்கணும், விதி யாரை விட்டுச்சி.

"டேய் நீ சைனா மொபைல் வச்சிருக்கியா ?"

"ஏன் உங்களுக்கு வேணுமா?"

"மொன்ன நாயே!... என்ன பார்த்தா என்ன 2000 ரூபாய் மொபைல second handல வாங்கிறவன் மாதிரியா தெரியுது ?? கேக்குறதுக்கு பதில் சொல்ரா ...."


"சரி சொல்லுங்க"

" நம்ம நண்பர் ஒருத்தர் இந்த மாதிரி ஒரு போன் வாங்கனும்னு பாக்குறார்...ஆனா இதுல நெறைய பிரச்சனை வரும்னு சொல்ராங்களே... இந்த ரேடியேசன், ஹியரிங் ப்ரோப்லேம் இந்த மாதிரி ?? "

"ரேஷன் பத்தி தெரியலை சார்... ஆனா இயரிங் ப்ரோப்லேமலா வராது ... அப்பிடியே வந்தாலும் அதை சரி பண்ணிரலாம் "

"இப்படி ஆல தான் நான் தேடிகிட்டிருந்தேன்.... எப்படி சரி பண்ணலாம் சொல்லு??

"போன காத விட்டு கொஞ்சதூரம் தள்ளி வச்சி பேசலாம்... இல்லினா லேசா என்னை ஊத்தின சரியா போயிரும்"

"என்னடா சொல்ற... என்னை உத்தனுமா?... "( இவன் MBBS படிக்காத டாக்டரா இருப்பான் போல.. பேச்சு கொடு.. பேச்சு கொடு.. என்றது என் மனச்சாட்சி). அதை நம்ம்ம்பி தொடர்ந்தேன்.

"சரி... என்னைய எங்க ஊத்தணும்... காதுலயா இல்லை போன்la யா ??"

"போன்ல ஊத்தின போன் ரிப்பேர் ஆயிரும்... காதுல தான் ஊத்தணும் "

"ஒ... அப்போ காதுல என்னை ஊத்துனா பிரச்சனை இல்லை?"

" ஆமா சார்.. அப்படியே பிரச்சனை வந்தாலும் இயரிங்க கழட்டி வச்சிடா பிரச்சனை இல்லை"

இயரிங்க கழட்டி வைக்கணுமா... என்ன எழவுடா சொல்றான் இவன் என்று அருகில் இருந்த விவரமான பசங்ககிட்ட கேட்டால் அப்போ தான் தெரியுது அந்த நாயி இவ்வளவு நேரம் சொன்னது hearing பத்தி அல்ல ear-ring( அதாவது கம்மல்) பத்தி என்று.

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... இப்போவே கண்ண கட்டுதே...

பேசாம நாமளும் எல்லாரையும் போல "சைனா பொண்ணுங்களுக்கு ஏன் மூக்கு சப்பையா இருக்குனு" கும்மி அடிச்சிட்டு போயிருக்கலாம் . இன்னைக்கு பொழப்பு வெளங்குன மாதிரி தான்...

நல்லா இருங்கடா டேய்.. நல்லா இருங்க.....



1 கும்மிகள்:

testing........

Post a Comment