அவர்கள் இருவருக்கும் 10 நாட்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.. இன்று போனில்.....

அவள்: என்ன பண்றிங்க?

அவன்: சும்மா தான் இருக்கேன்

அவள்: அது தான் தெரியுமே.. ஆபிசுல நீங்க என்னைக்கு வேல பாத்துறிக்கிங்க.

அவன்: இதுல்லாம் ரொம்ப ஓவர்டி

அவள்: உங்க friends எல்லாம் சொல்றாங்க "அண்ணனுக்கு சம்பளம் கொடுக்குறது ஆணியே புடுங்காம இருக்க தான்னு"

அவன்: ஆமா நீ சமையல் செஞ்சு பழகிட்டியா ?

அவள்: அதெல்லாம் அங்க வந்து கத்துக்கறலாம் ....

அவன்: அந்த விசப்பரிட்சையே வேணாம்.. ஒழுங்கா அங்கேயே கத்துக்கோ..

அவள்: இதுல்ல என்ன விசப்பரிட்சை இருக்கு ?

அவன்: ஆமா எப்படி சமைக்குறதுங்கர பரீட்சை உனக்கு... நீ சமைச்ச சாப்பாடு அதாவது விஷம் எனக்கு...

அவள்: @#$@# உங்களுக்கு போயி போன் பண்ணினேனே என்னைய சொல்லணும்.. டொக்....