பதிவுகளை ஈமெயிலில் பெற
என்னை பற்றி
- கணேஷ்
- பூரா பயலுவலும் நம்மளயே கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு பாக்குராய்ங்களே.... நம்மகிட்ட ஓவெரா எதிர் பாக்குராய்ங்களோ......
தோழமைகள்
டாப் 10 மறுமொழியாளர்கள்
பதிவுகள்
நாம போய் வந்து இருக்குறது
-
-
வாயடைத்து நின்றேன்10 years ago
-
where is Tools in firefox12 years ago
-
லோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா?15 years ago
-
வகைகள்
- அவனும் அவளும்... (1)
- இம்சை (3)
- ஈமெயில் (4)
- காமெடி (8)
- கிறுக்கல் (5)
- சுய சொரிதல் (3)
- டிப்ஸ் (1)
- புலம்பல் (4)
- போட்டி (1)
- மொக்கை (9)
- விளம்பரம் (2)
எப்படி வருவது:
இந்தியாவுக்குள் வருவதற்கு 3 வழிகள் உள்ளன.
முதலாவது: ஏர்-இந்தியா விமானம் முலமாக டெல்லி, மும்பை, சென்னை அல்லது கொல்கத்தாவுக்கு வருவது. முக்கால் வாசி பேரு இப்படி தான் வர்ராய்ங்க. இங்க வந்து இறங்குனதுக்கு அப்புறம் ரயிலோ, பேருந்தோ புடிச்சு அவனுங்க ஊருக்கு போவானுங்க.
எல்லாரும் இறங்கி வேற எங்காவது போவாய்ங்கனா, அப்புறம் விமான நிலையத்த எதுக்கு இந்த ஊர்ல வச்சிருக்கிங்கன்னு உங்களுக்கு தோணும், அப்படி தோணுனா, மூடிக்கிட்டு பேசாம இருக்கணும். எங்க ஊருல நாங்க எங்க வேணா விமான நிலையம் கட்டுவோம்டா அத கேக்க நீ யாருடா என் வென்று.
வந்தோமா, ஊற சுத்தி பார்த்தோமா, காச செலவு செஞ்சமானு இருக்கணும், அத விட்டுட்டு இந்த மாதிரி கேள்விலாம் கேட்டா அடிச்சி பல்ல பேத்துருவோம்.
இரண்டாவது:
இது "ரிஸ்க் எடுக்குறது எனக்கு ரஸ்க் சாப்டுற மாதிரின்னு" சொல்ற மக்களுக்காக. அதாவது பாகிஸ்தானில் இறங்கி அங்கிருந்து காஷ்மீர்ருக்குள் நுழைந்து , அதன் மூலம் இந்தியாவுக்குள் வருவது. இதுல A.K-47 துப்பாக்கி மற்றும் போக்குவரத்து செலவுகள் அனைத்தையும் பாகிஸ்தான் அரசாங்கம் கவனித்துக்கொள்ளும். ஆனால் ஒரே பிரச்சனை உங்கள் உயிருக்கு எங்களால் உத்திரவாதம் கொடுக்க முடியாது.
மூன்றாவது:
பங்களாதேஷ்ல் இறங்கி அங்கிருந்து எல்லையை தாண்டி இந்தியாவுக்குள் வருவது. பங்களாதேஷ் அரசாங்கம் இதை இலவச சேவையாக செய்தாலும் அங்கிருக்கும் சிலர் உங்கள் பணத்தை அபகரிக்கும் ஆபத்து அதிகம்.
ஏர் - இந்திய விமானத்தில் எப்படி நடந்து கொள்வது :
நீங்கள் விமானத்தில் ஏறியவுடன் ஒரு வயதான பெண்மணி "ஏர் - இந்தியா உங்களை வரவேற்கிறது" என்று கூறுவார். உடனே "ஐயோ பூச்சாண்டி!, பூச்சாண்டி!" என்று கூச்சல் போடுதல் கூடாது. அவர் விமான பணிப்பெண். உங்களுக்கு உதவுவதற்க்காக இருந்தாலும், பல நேரங்களில் நீங்கள் தான் அவர்களுக்கு உதவும் படி இருக்கும். (மாத்திரை, மருந்து எடுத்து கொடுக்குறது போன்றவை)
"நான் என் பொண்டாட்டிக்கு தினமும் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி முத்தம் கொடுப்பேன்... நீங்க எப்படி?"
"ஹி.. ஹி.. நானும் தான்... நீங்க ஆபீஸ்க்கு போனதுக்கு அப்புறம்"
"!!!!!"
------------------------------------------
"என்ன சார் வேணும்?"
"நம்ம நாட்டு தேசிய கொடி ஒன்னு குடுப்பா"
"இது எப்படி சார் இருக்கு?"
"வேற காட்டுப்பா"
"சார் இது?"
"இல்லை.. வேற காட்டு"
"இது சார்"
"யோவ்! வேற கலர்ல காட்டுயா ... ஒரே கலரையே திரும்ப திரும்ப காட்டிக்கிட்டு"
"!!!!!!"
------------------------------------------
"ஒரு நூறு கோழி குஞ்சு குடுப்பா "
"என்ன சார்! கோழிப்பண்ணை வைக்க போறேன்னு, போன வாரம் நூறு கோழி குஞ்சு வங்கிட்டுப்போனிங்க... என்ன ஆச்சு?"
"ஒன்னும் வளரலப்பா..."
"சரி சார்! இந்த தடவையாவது எல்லா கோழி குஞ்சும் நல்லா வளர்ந்து நீங்க பெரிய ஆளா வரணும்"
"வருவோம்ல... போன தடவ என்ன தப்புன்னு கண்டுபிடிச்சிட்டோம்ல"
"போன தடவ என்ன சார் தப்பு?"
"ரொம்ப ஆழமா நட்டுட்டேன்"
"!!!!!!"
------------------------------------------------------------------------------
"டேய்.. வாடா! என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?"
"ஆபீஸ்ல ஆணி நிறைய...இத புடுங்கு... அத புடுங்குனு ஒரே இம்சை... அப்புறம் வேற என்ன விசேசம்"
"உனக்கு தெரியுமா நம்ம ராஞ்சிகாரன் புதுசா ஒரு வலைப்பூ ஆரம்பிச்சிருக்கான்"
"நல்ல விஷயம் தான... முகவரி சொல்லு"
"http://sellursingam.blogspot.com"
"ஆமா.. அவன் பழைய வலைப்பூ என்னாச்சு"
"அட அது பெரிய கதை... இவன் என்னத்தயாச்சும் வலைப்பூவுல போட்டுட்டு, எல்லாத்துக்கும் போன் அடிச்சு அத பார்த்தியா, இத பார்த்தியானு உயிரை வாங்கிருக்கான்"
"சரி"
"அத பொறுக்க முடியாம நம்ம பயலுவ ஒரு 4-5 பேரு சேர்ந்து அந்த வலைப்பூவுக்கு செய்வினை வச்சிட்டானுங்க"
" யாரு அந்த 4-5 புண்ணியவானுங்க ? "
"அவன் ராஞ்சியில ஒரு சாமியார்கிட்ட மய்யி வச்சி பார்த்ததுல இந்த சிறகுகள் குரூப் பயலுவ மேல தான் சந்தேகமாம்"
"அந்த குரூப்ல தான் இவன் உருத்து பயலுக ரெண்டு மூணு பேரு இருக்காய்ங்களே.. அவிய்ங்க இருந்துமா இப்படி நடந்துச்சு?"
"அட அவனுங்க தான் வசூல் பண்ணி எல்லாம் செஞ்சிறுக்கானுங்க..."
"அடப்பாவமே... அந்த கோவத்துல தான் யாரு போன் அடிச்சாலும் எடுக்கமாட்டேன்குறானா??"
------------------------
மணிக்கட்டை காட்டியபடி நண்பன்: மச்சி, மணி என்னடா ?
"அதுக்கு ஏன் கையா அங்க காட்டுற... எங்களுக்கு தெரியும்டா மணி எங்க பார்த்து சொல்லனும்னு... ஆமா பாத்ரூம் எங்க இருக்குன்னு கேக்குறதுக்கு நீ
இப்பிடி தான் கைய பின்னாடி காட்டி கேப்பியா?"
ஏன்டா இப்பிடி இம்சைய கொடுக்குறிங்க....
-------------------------------------------------------------
"என்னடா! திடிர்னு உன்னைய ஆல காணோம்... எங்க போன?"
(பெருமையாக) "PISS அடிக்க போனோம்"
"முண்ட... பானிபட் போருக்கு போன மாதிரி பெருமையா சொல்ற... இதெல்லாம் கொஞ்சம் கூச்சத்தோட சொல்லனும்டா..."
ஏன்டா இப்பிடி இம்சைய கொடுக்குறிங்க....
-------------------------------------------------------------
"என்ன சார்! படத்துக்கா ?"
"அட நாதாரி நாயே... தியேட்டருக்கு என்ன சேவிங் பண்ணவா வருவாய்ங்க?"
ஏன்டா இப்பிடி இம்சைய கொடுக்குறிங்க....
-------------------------------------------------------------
1. இந்த sales repலாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க....???
2. எல்லா டிவி சாணல்லயும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்டுறுக்காங்க ? (பெரிய கொடுமை என்னனா... ஆபிசில எங்க bossஅ பர்த்தா எனக்கு ரோபோ சங்கர் நெனப்பு வந்து சிரிச்சிர்றேன்...)
3. டெலிபோண்ல நம்பர்கள் மேலிருந்து கீழ இருக்கு கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ???
4. மூக்கிலிருந்தும் வாயில்லிருந்தும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ?? (அத உடனே எல்லாரும் ஏன் செஞ்சு பார்க்குறாங்க?)
5. flightlaயோ இல்லை நம்ம ரேஞ்சுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா ?? (நாம தான் ஊருக்கு போய்ச்சேரலையே ?? )
6. கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார்? (கோழி வித்தியாசமா கக்கா போகுதுன்னு விடாம அதை எடுத்து சாப்பிட்டிருக்கான் பாருங்க)
7. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதிமன்றம் சென்றால் அவர்களும் "கீதை" மேல் சத்தியம் செய்ய வேண்டுமா ???
8. விளம்பரங்களில் "இலவசப்பரிசு" என்று சொல்கிறார்களே... பரிசுனாலே அது இலவசம் தாணே.... இல்லயா??
9. Numberஐ ஏன் சுருக்கமா எழுதும் பொது No. ணு எழுதுறோம் ?? Numberல Oங்கர எழுத்தே இல்லையே???
10. ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை
11. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே... அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா?
12. சினிமா DVDய reverseல சுத்தினா படம் reverseல ஒடுமா??
13. "அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு" எல்லாரும் சொல்ராங்களே... நாய் எண்னைக்கு வேலை செய்திருக்கு…. ஒரு ஓரமா படுத்து வால் ஆட்டிட்டு இருக்கும்... இல்லையா ???
14. கண்னு பெருசா இருக்குறவங்களுக்கு கண்னு சிரியதாக இருப்பவர்களை விட sideல அதிகமாக பார்க்க முடியுமா???
இந்தியாவுல இப்போ எங்க பார்த்தாலும் தீவிரவாதத்தையும், பாகிஸ்தானையும் பற்றி தான் பேச்சு... அது போல் பாகிஸ்தானியர்கள் அவர்களுக்குள் இந்தியாவை பற்றி என்ன பேசிக்கொள்வார்கள் என்று ஒரு கற்பனை....
------------------------
"டேய்... நம்ம அரசாங்கம் அமெரிக்காவுல இருந்து 5000 செப்டிக் டாங்க் (septic tank) வாங்குராங்கலாமே.... தெரியுமா ??"
"அப்படியா.... ங்கொய்யால....அது வந்து எறங்குனதும், இந்தியா மேல படை எடுத்துற வேண்டியது தான்..."
---------------------
"இந்தியாவுல எந்த நம்பிக்கைல ப. சிதம்பரத்தை உள்துறை அமைச்சரா ஆக்கிருக்காங்க ? "
"ஷேர் மார்க்கட்ட அடிச்சி காலி பண்ணுன மாதிரி தீவிரவாதத்தையும் காலி பன்னுவாருங்கர நம்பிக்கைல தான்...."
------------------------
"இந்தியாகாரனுங்க நமக்கு முன்னாடி நிலாவுக்கு ராக்கெட் விட்டுட்டானுங்களே..."
"அதுக்கு தான் நம்ம அரசாங்கம் சூரியனுக்கு ராக்கெட் விடப்போறம்னு சொல்லிருக்காங்களே..."
"சூரியனுக்கு ராக்கெட்டா ? எரிஞ்சிறாது?"
"நம்ம ராத்திரியில விடுவோம்ல!"
--------------------------
பாகிஸ்தான் ISI அலுவலகத்தில்....
"யோவ்... இந்தியகாரணுங்க இம்சை தாங்க முடியலை... ரெண்டு வெள்ளை பேப்பர் கொடு... காட்டமா ஒரு லெட்டர் எழுதுறேன்...."
"சார்.. ஒரு வெள்ளை பேப்பர் தான் இருக்கு"
"அத ஒரு xerox போட்டு ரெண்டா கொடு... இத கூட நான் சொல்லனுமா"
"????????????"
----------------------------


