நேற்று நடந்த இரு நிகழ்வுகள் தான் இன்றைய பதிவு....

பதிவ படிச்சமா, ஒரு பின்னோட்டம் போட்டமானு இல்லாம..... இப்ப புதுசா ஒரு வழி கண்டுபிடிச்சிருக்காய்ங்க... அதாவது குறுஞ்செய்தி அனுப்புறது... என்னோட முந்தய பதிவ படிச்ச நண்பன் அனுப்புன குறுஞ்செய்தி "அந்த 15 பொண்ணுங்க பேரு, விலாசத்த சொஞ்சம் அனுப்பவும்".


இவன் எதுக்கு இதக்கேக்குரான்னு யோசிச்சா, அப்பத்தான் தெரியுது நம்மாளு அந்த பொண்ணுங்கள கரெக்ட் பண்ண பாக்குறது. நான் கொஞ்சம் சுதாரிச்சிக்கிட்டு போன் அடிச்சேன்.

"சொல்றா... S.M.S படிச்சியா?"

"ம்ம்.. படிச்சேன்... அவளுங்களுக்கு எல்லாம் கல்யாணம் அயிரிச்சுனு எழுதிருக்கேன் பார்க்கலையா?"

"அதுனால என்ன... எனக்கும் தான் கல்யாணம் ஆயிருச்சி"

"@#%$&"

அட கெரகம் பிடிச்சவய்ங்கலா.... உங்கள மாதிரி ஆளுக இருக்குறதுனால தான் அப்ப...அப்ப மழை பெய்யுது, ஆல் டைம் வெயில் அடிக்குது . உங்களையெல்லாம் அந்த திருநகர் மாமி சாரி சாமி தான் காப்பாத்தனும்

-------------------------------------

நம்ம பய ஒருத்தண் கிட்ட இருந்து மிஸ்ஸுடு கால்....

"என்னடா! கால் பண்ணுனியா?"

"அமாண்டா! ஒரு நம்பர் தர்றேன் எழுதிக்கோ"

"சொல்லு"

"001040203030403"

(நான் மனதுக்குள்)ஆஹா! நண்பன் ஏதோ வெளிநாட்டு நம்பர் கொடுக்குறான் . கண்டிப்பா எதாவது அமெரிக்கா பொண்ணு நம்பரா தான் இருக்கும். இத கரெக்ட் பண்ணி அமெரிக்கா போயி ஹவுஸ் husbanda இருந்துற வேண்டியது தான். லேட்டா வந்தா வசவு, சீக்கிரம் போனா வசவு, பேப்பர தொலைச்சா வசவு.... ச்சே..ச்சே.. எவ்வளவு கஷ்டப்பட்டுட்டோம்... அமெரிக்க போயி சேலைய தொவச்சி போட்டமா, சமையல் பன்னுனோமானு, கைக்கு அடக்கமான புருசன இருந்துறலாம்"

"டேய் வெண்ணை! என்ன தூங்கிட்டியா?"

"இது யாரு நம்பர்டா?"

"என்னோட I.C.I.C.I நம்பரு.... இப்ப உடனே ஒரு ரெண்டாயிரம் ரூபா போட்டு விடு... மறந்துறாத... சரியா... வச்சிர்றேன்..."

என்னடா இப்பிடி கெலம்பிட்டிங்க... கடன் கேக்குரது கூட மிஸ்ஸுடு கால் குடுத்தா கேக்குறது... இது தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதா