"நான் என் பொண்டாட்டிக்கு தினமும் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி முத்தம் கொடுப்பேன்... நீங்க எப்படி?"

"ஹி.. ஹி.. நானும் தான்... நீங்க ஆபீஸ்க்கு போனதுக்கு அப்புறம்"

"!!!!!"

------------------------------------------


"என்ன சார் வேணும்?"

"நம்ம நாட்டு தேசிய கொடி ஒன்னு குடுப்பா"

"இது எப்படி சார் இருக்கு?"

"வேற காட்டுப்பா"

"சார் இது?"

"இல்லை.. வேற காட்டு"

"இது சார்"

"யோவ்! வேற கலர்ல காட்டுயா ... ஒரே கலரையே திரும்ப திரும்ப காட்டிக்கிட்டு"

"!!!!!!"

------------------------------------------

"ஒரு நூறு கோழி குஞ்சு குடுப்பா "

"என்ன சார்! கோழிப்பண்ணை வைக்க போறேன்னு, போன வாரம் நூறு கோழி குஞ்சு வங்கிட்டுப்போனிங்க... என்ன ஆச்சு?"

"ஒன்னும் வளரலப்பா..."

"சரி சார்! இந்த தடவையாவது எல்லா கோழி குஞ்சும் நல்லா வளர்ந்து நீங்க பெரிய ஆளா வரணும்"

"வருவோம்ல... போன தடவ என்ன தப்புன்னு கண்டுபிடிச்சிட்டோம்ல"

"போன தடவ என்ன சார் தப்பு?"

"ரொம்ப ஆழமா நட்டுட்டேன்"

"!!!!!!"

------------------------------------------------------------------------------3 கும்மிகள்:

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

சிரிக்க முடிந்தது

நன்றி வம்பு விஜய்

Post a Comment