1. எல்லாரும் மொபைல்ல ஆப் பண்ணுங்கன்னு மீட்டிங்ல சொன்ன அடுத்த நொடி கால் வரும்...

2. தட்கல் டிக்கெட்டுக்காக டென்சனா வரிசையில் நிக்கும் போது நமக்கு முண்ணாடி நிக்கும் நபர் 5 ரூபா சில்லறைக்காக அரை மணி நேரம் கழுத்தறுப்பார் ...

 3.ஜூனியர் பொண்ணுங்க முன்னாடி சீன் போடும்  போது H.O.D வந்து நம்ம +2   மார்க் கேப்பாரு...


4. நம்ம சிக்கிரம் வந்தா பஸ் லேட்டா வரும்... நாம கரெக்டா வந்தா பஸ் முன்னாடியே போயிருக்கும்...


5.  என்னைக்கு  நம்ம கிட்ட  சில்லறை இல்லையோ... அன்னைக்கு கண்டக்டர்கிட்டயும்  சில்லறை  இருக்காது...


6. கிறீச கைல தடவிட்டு எதாவது வேலை பார்க்கும் போதுதான் கண்ட இடத்தில எல்லாம் அரிக்கும் 


7. எந்த பேப்பர நாம தொலைச்சோமோ  அந்த பேப்பர் அபிஸ்ல இருக்குற அவ்வளவு பேருக்கும் தேவைப்படும் 

அவர்கள் இருவருக்கும் 10 நாட்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.. இன்று போனில்.....

அவள்: என்ன பண்றிங்க?

அவன்: சும்மா தான் இருக்கேன்

அவள்: அது தான் தெரியுமே.. ஆபிசுல நீங்க என்னைக்கு வேல பாத்துறிக்கிங்க.

அவன்: இதுல்லாம் ரொம்ப ஓவர்டி

அவள்: உங்க friends எல்லாம் சொல்றாங்க "அண்ணனுக்கு சம்பளம் கொடுக்குறது ஆணியே புடுங்காம இருக்க தான்னு"

அவன்: ஆமா நீ சமையல் செஞ்சு பழகிட்டியா ?

அவள்: அதெல்லாம் அங்க வந்து கத்துக்கறலாம் ....

அவன்: அந்த விசப்பரிட்சையே வேணாம்.. ஒழுங்கா அங்கேயே கத்துக்கோ..

அவள்: இதுல்ல என்ன விசப்பரிட்சை இருக்கு ?

அவன்: ஆமா எப்படி சமைக்குறதுங்கர பரீட்சை உனக்கு... நீ சமைச்ச சாப்பாடு அதாவது விஷம் எனக்கு...

அவள்: @#$@# உங்களுக்கு போயி போன் பண்ணினேனே என்னைய சொல்லணும்.. டொக்....விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும் ... just for funஇமெயிலில் அனுப்பிய தம்பி மகேஸ்வரனுக்கு நன்றி...போனில் L.K.G பையன்: என் பையனுக்கு காய்ச்சல் அதுனால இன்னைக்கு ஸ்கூலுக்கு வர மாட்டான்

டீச்சர்: சரி, நீங்க யாரு பேசுறது?

L.K.G பையன்: எங்க அப்பா

டீச்சர்:!!!!!!

-------------------------------------------------------------------------

L.K.G பையன் 1: மச்சி, தம் அடிச்சா கேன்சர் வரும்னு டீச்சர் சொல்றாங்கடா
L.K.G பையன் 2: டீச்சர் ஏப்ரல் பூல் பண்றாங்க மாப்ள.. தம் அடிச்சா புகை தான் வரும்

----------------------------------------------------------------------------

L.K.G பையன் 1: இட்லிக்கும் தோசைக்கும் என்ன வித்தியாசம்?
L.K.G பையன் 2: இட்லி கூட்டமா வரும், தோசை singleலா வரும் .

----------------------------------------------------------------------------

L.K.G பையன் 1: மாப்ள எங்க அப்பா பயந்தான்கோழியா இருக்காருடா .
L.K.G பையன் 2: எப்படிடா சொல்லுற ?
L.K.G பையன் 1: எப்ப ரோடு cross பண்ணுனாலும் என் கைய இருக்கமா பிடிச்சிருக்கிறார்

-----------------------------------------------------------------------------

நாங்க திரும்பி வந்துட்டோம்ல... அலப்பறை தொடரும்...நேற்று நடந்த இரு நிகழ்வுகள் தான் இன்றைய பதிவு....

பதிவ படிச்சமா, ஒரு பின்னோட்டம் போட்டமானு இல்லாம..... இப்ப புதுசா ஒரு வழி கண்டுபிடிச்சிருக்காய்ங்க... அதாவது குறுஞ்செய்தி அனுப்புறது... என்னோட முந்தய பதிவ படிச்ச நண்பன் அனுப்புன குறுஞ்செய்தி "அந்த 15 பொண்ணுங்க பேரு, விலாசத்த சொஞ்சம் அனுப்பவும்".


இவன் எதுக்கு இதக்கேக்குரான்னு யோசிச்சா, அப்பத்தான் தெரியுது நம்மாளு அந்த பொண்ணுங்கள கரெக்ட் பண்ண பாக்குறது. நான் கொஞ்சம் சுதாரிச்சிக்கிட்டு போன் அடிச்சேன்.

"சொல்றா... S.M.S படிச்சியா?"

"ம்ம்.. படிச்சேன்... அவளுங்களுக்கு எல்லாம் கல்யாணம் அயிரிச்சுனு எழுதிருக்கேன் பார்க்கலையா?"

"அதுனால என்ன... எனக்கும் தான் கல்யாணம் ஆயிருச்சி"

"@#%$&"

அட கெரகம் பிடிச்சவய்ங்கலா.... உங்கள மாதிரி ஆளுக இருக்குறதுனால தான் அப்ப...அப்ப மழை பெய்யுது, ஆல் டைம் வெயில் அடிக்குது . உங்களையெல்லாம் அந்த திருநகர் மாமி சாரி சாமி தான் காப்பாத்தனும்

-------------------------------------

நம்ம பய ஒருத்தண் கிட்ட இருந்து மிஸ்ஸுடு கால்....

"என்னடா! கால் பண்ணுனியா?"

"அமாண்டா! ஒரு நம்பர் தர்றேன் எழுதிக்கோ"

"சொல்லு"

"001040203030403"

(நான் மனதுக்குள்)ஆஹா! நண்பன் ஏதோ வெளிநாட்டு நம்பர் கொடுக்குறான் . கண்டிப்பா எதாவது அமெரிக்கா பொண்ணு நம்பரா தான் இருக்கும். இத கரெக்ட் பண்ணி அமெரிக்கா போயி ஹவுஸ் husbanda இருந்துற வேண்டியது தான். லேட்டா வந்தா வசவு, சீக்கிரம் போனா வசவு, பேப்பர தொலைச்சா வசவு.... ச்சே..ச்சே.. எவ்வளவு கஷ்டப்பட்டுட்டோம்... அமெரிக்க போயி சேலைய தொவச்சி போட்டமா, சமையல் பன்னுனோமானு, கைக்கு அடக்கமான புருசன இருந்துறலாம்"

"டேய் வெண்ணை! என்ன தூங்கிட்டியா?"

"இது யாரு நம்பர்டா?"

"என்னோட I.C.I.C.I நம்பரு.... இப்ப உடனே ஒரு ரெண்டாயிரம் ரூபா போட்டு விடு... மறந்துறாத... சரியா... வச்சிர்றேன்..."

என்னடா இப்பிடி கெலம்பிட்டிங்க... கடன் கேக்குரது கூட மிஸ்ஸுடு கால் குடுத்தா கேக்குறது... இது தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதா