இது முக்கியமா இந்த forwarded மெயில் அனுப்புற மக்களுக்காக. இதுக்குமேல என்னால தாங்க முடியாது... போதும்டா... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்.

கணக்கு வழக்கு பாக்குறதுக்கு கண்டுபுடிச்ச கம்ப்யூட்டர ஜோசியம் பாக்க வச்சது நம்மாளுங்க தான். அதனால இந்த forwarded மெயில் மேட்டரும் நம்மாளுங்க கண்டுபிடிச்சதா தான் இருக்கும்.

நீங்க பண்ணுன அட்டுழியம் கொஞ்சமா நஜ்ஜமா.

மொதல்ல, சினிமா தியேட்டர்ல சீட்டுல எய்ட்ஸ் ஊசி வைக்கிராய்ங்கனு சொன்னிங்க. அதுல இருந்து தியேட்டர் பக்கமே போகலை.

அப்புறம் பெப்சி, கோக-கோலா எல்லாம் கக்கூஸ் கழுவத்தான் லாயக்குன்னு சொன்னிங்க. அதோட சரி. அதையும் விட்டாச்சு.

அப்புறம் vicks action 500ஐ தடை பண்ணிட்டாங்கனு சொன்னிங்க... மருந்து கடைக்காரன் கிட்ட அடி வாங்காதது தான் மிச்சம்.

அதோட இந்த மெயில்ல microsoftக்கு அனுப்புனா லேப்டாப்பு , அந்த மெயில்ல நோக்கியாவுக்கு அனுப்புனா செல்போன்னுணு,என்ன நேக்கா கத சொன்னிங்கடா... லேப்டாப்பும் வரலை, செல்போனும் வரல.

அப்புறம், இந்த விநாயகர், சாய்பாபா படத்தையெல்லாம் அனுப்பி, இத 10 பேருக்கு அனுப்புனா... நீங்க ஆசைப்பட்டதெல்லாம் நடக்கும்னு சொன்னிங்க... ஆனா நான் ஆசப்பட்ட 15ஜும் வேற எவன், எவனையோ கட்டிக்குட்டு இப்ப இந்திய பூர பரவிக்கெடக்குதுங்க.... (ஒன்னும் சிக்கலை )

அதோட விடுராய்ங்கலாணா....அது தான் இல்லை.... நேத்து ஒரு மெயில் வருது... இத உடனே 10 பேருக்கு அனுப்பலைனா... நீ செத்துப்போயிருவேன்னு...... (நமக்கு பயம்லா ஒன்னும் இல்லை.... அட இருந்தாலும் உசுர் விசயத்துல சூதானமா இருக்கனும்ல).

ஆபிசுல வேல வெட்டி இல்லேன்னா... பேசாம எங்கள மாதிரி தமிழ்மணம், தமிளிஷ்ணு பொழுத போக்க வேண்டியதுதான... உங்களுக்கு மட்டும் ஏன் மூளை இப்படி வேல செய்யுது...

போதும்டா... இதுக்குமேல என்னால தாங்க முடியாது... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். இனிமேல் நானும் உங்களுக்கு forward பண்ணல, நீங்களும் எனக்கு forward பண்ணாதிங்க...அலுவலகத்தில் சில/பல காரணங்களுக்காக பல வலைத்தளங்கள் தடை செய்யப்படுவதுண்டு. (எங்க அலுவலகத்தில் தமிழிஷ் தடைசெய்யப்பட்டுள்ளது). அவ்வாறான வலைத்தளங்களை பார்ப்பது எப்படி?. மிகவும் எளிது

இந்த வலைத்தளத்திற்கு முதலில் செல்லுங்கள். http://www.hidemyass.comஇங்கு நீங்கள் பார்க்கவேண்டிய வலைதள முகவரியை டைப் செய்து எண்டரை அழுத்துங்கள். உங்கள் வலைத்தளம் உங்கள் கையில்.


நாங்களும் விகடன்.காம்ல வந்துட்டோம்ல... அதுவும் போட்டாவோட.. முதல் பக்கத்துலயும் இருக்கோம்...


http://www.vikatan.com
http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/kaganeshstory200609.asp


விகடனுக்கு மனமார்ந்த நன்றி... தமிழ்மணம் மற்றும் தமிழிஷ்ல் ஒட்டு போட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


அட விகடன், குங்குமம் இப்பிடி எதுலயாவது நம்ம பதிவு வந்தா, இந்த மாதிரி ஒரு பதிவு போடணுமாம். இல்லேன்னா சாமிகுத்தம் ஆயிருமாம், மித்தபடி இந்த விளம்பரமெல்லாம் நமக்கு பிடிக்காது...
ஆஸ்திரேலியா போகுற நம்ம மக்களுக்கு, இந்திய அரசு சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது, அதே போல் இந்தியா வரும் வெளிநாட்டவருக்காக நாங்கள் சில குறிப்புக்களை வெளியிடுகிறோம்.

எப்படி வருவது:

இந்தியாவுக்குள் வருவதற்கு 3 வழிகள் உள்ளன.

முதலாவது: ஏர்-இந்தியா விமானம் முலமாக டெல்லி, மும்பை, சென்னை அல்லது கொல்கத்தாவுக்கு வருவது. முக்கால் வாசி பேரு இப்படி தான் வர்ராய்ங்க. இங்க வந்து இறங்குனதுக்கு அப்புறம் ரயிலோ, பேருந்தோ புடிச்சு அவனுங்க ஊருக்கு போவானுங்க.


எல்லாரும் இறங்கி வேற எங்காவது போவாய்ங்கனா, அப்புறம் விமான நிலையத்த எதுக்கு இந்த ஊர்ல வச்சிருக்கிங்கன்னு உங்களுக்கு தோணும், அப்படி தோணுனா, மூடிக்கிட்டு பேசாம இருக்கணும். எங்க ஊருல நாங்க எங்க வேணா விமான நிலையம் கட்டுவோம்டா அத கேக்க நீ யாருடா என் வென்று.


வந்தோமா, ஊற சுத்தி பார்த்தோமா, காச செலவு செஞ்சமானு இருக்கணும், அத விட்டுட்டு இந்த மாதிரி கேள்விலாம் கேட்டா அடிச்சி பல்ல பேத்துருவோம்.

இரண்டாவது:

இது "ரிஸ்க் எடுக்குறது எனக்கு ரஸ்க் சாப்டுற மாதிரின்னு" சொல்ற மக்களுக்காக. அதாவது பாகிஸ்தானில் இறங்கி அங்கிருந்து காஷ்மீர்ருக்குள் நுழைந்து , அதன் மூலம் இந்தியாவுக்குள் வருவது. இதுல A.K-47 துப்பாக்கி மற்றும் போக்குவரத்து செலவுகள் அனைத்தையும் பாகிஸ்தான் அரசாங்கம் கவனித்துக்கொள்ளும். ஆனால் ஒரே பிரச்சனை உங்கள் உயிருக்கு எங்களால் உத்திரவாதம் கொடுக்க முடியாது.

மூன்றாவது:

பங்களாதேஷ்ல் இறங்கி அங்கிருந்து எல்லையை தாண்டி இந்தியாவுக்குள் வருவது. பங்களாதேஷ் அரசாங்கம் இதை இலவச சேவையாக செய்தாலும் அங்கிருக்கும் சிலர் உங்கள் பணத்தை அபகரிக்கும் ஆபத்து அதிகம்.

ஏர் - இந்திய விமானத்தில் எப்படி நடந்து கொள்வது :


நீங்கள் விமானத்தில் ஏறியவுடன் ஒரு வயதான பெண்மணி "ஏர் - இந்தியா உங்களை வரவேற்கிறது" என்று கூறுவார். உடனே "ஐயோ பூச்சாண்டி!, பூச்சாண்டி!" என்று கூச்சல் போடுதல் கூடாது. அவர் விமான பணிப்பெண். உங்களுக்கு உதவுவதற்க்காக இருந்தாலும், பல நேரங்களில் நீங்கள் தான் அவர்களுக்கு உதவும் படி இருக்கும். (மாத்திரை, மருந்து எடுத்து கொடுக்குறது போன்றவை)இந்தியாவின் உணவுப்பழக்கங்கள், வாழ்கை முறை மற்றும் பல அடுத்த பதிவில்...


இன்டர்நெட்டில் படித்த ஒரு வெளிநாட்டு கட்டுரையின் பாதிப்பில் எழுதப்பட்டது."நான் என் பொண்டாட்டிக்கு தினமும் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி முத்தம் கொடுப்பேன்... நீங்க எப்படி?"

"ஹி.. ஹி.. நானும் தான்... நீங்க ஆபீஸ்க்கு போனதுக்கு அப்புறம்"

"!!!!!"

------------------------------------------


"என்ன சார் வேணும்?"

"நம்ம நாட்டு தேசிய கொடி ஒன்னு குடுப்பா"

"இது எப்படி சார் இருக்கு?"

"வேற காட்டுப்பா"

"சார் இது?"

"இல்லை.. வேற காட்டு"

"இது சார்"

"யோவ்! வேற கலர்ல காட்டுயா ... ஒரே கலரையே திரும்ப திரும்ப காட்டிக்கிட்டு"

"!!!!!!"

------------------------------------------

"ஒரு நூறு கோழி குஞ்சு குடுப்பா "

"என்ன சார்! கோழிப்பண்ணை வைக்க போறேன்னு, போன வாரம் நூறு கோழி குஞ்சு வங்கிட்டுப்போனிங்க... என்ன ஆச்சு?"

"ஒன்னும் வளரலப்பா..."

"சரி சார்! இந்த தடவையாவது எல்லா கோழி குஞ்சும் நல்லா வளர்ந்து நீங்க பெரிய ஆளா வரணும்"

"வருவோம்ல... போன தடவ என்ன தப்புன்னு கண்டுபிடிச்சிட்டோம்ல"

"போன தடவ என்ன சார் தப்பு?"

"ரொம்ப ஆழமா நட்டுட்டேன்"

"!!!!!!"

------------------------------------------------------------------------------"டேய்.. வாடா! என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?"

"ஆபீஸ்ல ஆணி நிறைய...இத புடுங்கு... அத புடுங்குனு ஒரே இம்சை... அப்புறம் வேற என்ன விசேசம்"

"உனக்கு தெரியுமா நம்ம ராஞ்சிகாரன் புதுசா ஒரு வலைப்பூ ஆரம்பிச்சிருக்கான்"

"நல்ல விஷயம் தான... முகவரி சொல்லு"

"http://sellursingam.blogspot.com"

"ஆமா.. அவன் பழைய வலைப்பூ என்னாச்சு"

"அட அது பெரிய கதை... இவன் என்னத்தயாச்சும் வலைப்பூவுல போட்டுட்டு, எல்லாத்துக்கும் போன் அடிச்சு அத பார்த்தியா, இத பார்த்தியானு உயிரை வாங்கிருக்கான்"

"சரி"

"அத பொறுக்க முடியாம நம்ம பயலுவ ஒரு 4-5 பேரு சேர்ந்து அந்த வலைப்பூவுக்கு செய்வினை வச்சிட்டானுங்க"

" யாரு அந்த 4-5 புண்ணியவானுங்க ? "

"அவன் ராஞ்சியில ஒரு சாமியார்கிட்ட மய்யி வச்சி பார்த்ததுல இந்த சிறகுகள் குரூப் பயலுவ மேல தான் சந்தேகமாம்"

"அந்த குரூப்ல தான் இவன் உருத்து பயலுக ரெண்டு மூணு பேரு இருக்காய்ங்களே.. அவிய்ங்க இருந்துமா இப்படி நடந்துச்சு?"

"அட அவனுங்க தான் வசூல் பண்ணி எல்லாம் செஞ்சிறுக்கானுங்க..."

"அடப்பாவமே... அந்த கோவத்துல தான் யாரு போன் அடிச்சாலும் எடுக்கமாட்டேன்குறானா??"

------------------------மணிக்கட்டை காட்டியபடி நண்பன்: மச்சி, மணி என்னடா ?

"அதுக்கு ஏன் கையா அங்க காட்டுற... எங்களுக்கு தெரியும்டா மணி எங்க பார்த்து சொல்லனும்னு... ஆமா பாத்ரூம் எங்க இருக்குன்னு கேக்குறதுக்கு நீ
இப்பிடி தான் கைய பின்னாடி காட்டி கேப்பியா?"


ஏன்டா இப்பிடி இம்சைய கொடுக்குறிங்க....

-------------------------------------------------------------

"என்னடா! திடிர்னு உன்னைய ஆல காணோம்... எங்க போன?"

(பெருமையாக) "PISS அடிக்க போனோம்"

"முண்ட... பானிபட் போருக்கு போன மாதிரி பெருமையா சொல்ற... இதெல்லாம் கொஞ்சம் கூச்சத்தோட சொல்லனும்டா..."


ஏன்டா இப்பிடி இம்சைய கொடுக்குறிங்க....

-------------------------------------------------------------

"என்ன சார்! படத்துக்கா ?"

"அட நாதாரி நாயே... தியேட்டருக்கு என்ன சேவிங் பண்ணவா வருவாய்ங்க?"

ஏன்டா இப்பிடி இம்சைய கொடுக்குறிங்க....

-------------------------------------------------------------மெத்த படித்த மேதாவிகளே... வலையுலகின் சிங்கங்களே.... கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க பார்போம்....


1. Jawaharlal Nehru was the _______ of Indira Gandhi’s Father. ?

2. Make a grammatically correct sentence by using the verb "IS" immediately after the word "I"

3. I am having two coins of Indian currency in my pocket, the total value of which comes to 75 paisa. But mind you, one of the coins is not a fifty paisa coin. How it is possible?

4. What is taken from you before it is given to you?

5. Eventhough it belongs to you, usually others use it, What?